மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x

கலவை அருகே மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குருமுடித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரேணு (வயது 60). இவர் நிலத்தின் அருகே வீடு கட்டி வசித்து, விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் தனது நிலத்தின் அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி உள்ளார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் மாடுகளை ஓட்டி வர சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராமல் பம்ப் செட் அருகே உள்ள மின் கம்பம் திடீரென சாய்ந்துள்ளது. அந்த நேரத்தில் அங்கு சென்ற ரேணு மீது ஒயர்கள் விழுந்து மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்துள்ளார்.

இதுபற்றி கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story