ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்து விவசாயி பலி-ஆட்டை காப்பாற்ற சென்றவர் இறந்த பரிதாபம்


ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்து விவசாயி பலி-ஆட்டை காப்பாற்ற சென்றவர் இறந்த பரிதாபம்
x

ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்து விவசாயி பலியானார். அவர் தான் வளர்த்து வரும் ஆடு குட்டையில் தவறிவிழுந்து விடும் என கருதி அதை காப்பாற்ற சென்றவர் குட்டையில் தவறிவிழுந்து இறந்தார்.

சேலம்

ஓமலூர்:

விவசாயி பலி

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55), விவசாயி. இவர் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை காட்டூர் கல்குவாரி குட்டை அருகே இவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் அங்குள்ள குட்டையோரம் சென்றதாக தெரிகிறது. ஆடு குட்டைக்குள் தவறிவிழுந்து விடும் என்ற அச்சத்தில் அந்த ஆட்டை விரட்ட ராஜமாணிக்கம் அங்கு ஓடிச்சென்றார். அப்போது எதிர்பாராதமாக கல்குவாரி குட்டையில் அவர் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தார்.

உடல் மீட்பு

இது பற்றி காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜமாணிக்கத்தின் உடலை மீட்டனர்.அதே நேரத்தில் அங்கு வந்த ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார், ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story