குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கட்டையால் அடித்துக்கொலை


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கட்டையால் அடித்துக்கொலை
x

பூந்தமல்லி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

விவசாயி

பூந்தமல்லி அடுத்த திருமழிசை, முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் திருமழிசை அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (22), சரத்குமார் (21) என்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் குடிபோதையில் திரும்பி வந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த சதிஷ் (22), சரத்குமார் (21), ஆகியோர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பூபதியின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் பூபதி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து நிலையில் பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (22), சரத்குமார் (21), உள்ளிட்ட சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story