வந்தவாசி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலி
வந்தவாசி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 60). விவசாயி. கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்து வரும் இவர் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றார்.
அப்போது நிலத்தில் உள்ள கிணற்றில் இவர் தவறி விழுந்து விட்டார். தண்ணீரில் தத்தளித்த இவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இதனிடையே நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகன் சுரேஷ் தந்தையை தேடி வயலுக்கு சென்றார். அப்போது கிணற்றில் மூழ்கிய நிலையில் மணி உடல் மிதந்தது.
வந்தவாசி வடக்கு போலீசார் அங்கு சென்று மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணியின் மகன் சுரேஷ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.