தோட்டத்திற்கு சென்ற விவசாயி கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு


தோட்டத்திற்கு சென்ற விவசாயி கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு
x

தரகம்பட்டி அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

கரூர்

பிணமாக கிடந்த விவசாயி

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மேலபகுதி கிராமம் விராலிப்பட்டி கட்டாணியூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாயியான இவர், சம்பவத்தன்று மாலை தனது தோட்டத்திற்கு சென்றார். மறுநாள் காலைவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் கணேசனை தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் கணேசனின் உறவினர்கள் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்்குள் பார்த்துள்ளனர். அப்போது கணேசன் கிணற்றில் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் சிந்தாமணிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கணேசன் உடலை மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கணேசன் மகன் சசிகுமார் கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story