பள்ளத்தில் விழுந்த பெண் யானை சாவு


பள்ளத்தில் விழுந்த பெண் யானை சாவு
x

பள்ளத்தில் தவறி விழுந்த ெபண் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

பள்ளத்தில் தவறி விழுந்த ெபண் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பள்ளத்தில் தவறி விழுந்தது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் உள்ளன.

யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. இந்தநிலையில் வத்திராயிருப்பு மலைப்பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி அருகே ஒரு பெண் யானை, அவ்வப்போது உணவுக்காக வந்து செல்வது வழக்கம்.

புதைக்க நடவடிக்கை

அந்த யானை வரும் வழித்தடத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. உணவுதேடி வந்த அந்த யானை திடீரென அந்த பள்ளத்தினுள் திடீரென தவறி விழுந்தது. இதில் காயம் அடைந்த அந்த யானை உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கால்நடை டாக்டர்கள், யானையின் உடலை பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடலை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. யானையின் சாவு குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story