கொடைக்கானல்: விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு 40 ஆயிரம் அபராதம்


கொடைக்கானல்: விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு 40 ஆயிரம் அபராதம்
x

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு அதிகாரிகள் ரூ.40ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதிகள் உள்ளன. இதனால் அதிகளவில் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசுத்துறைகளில் அனுமதிபெற்று அதன்பின்னர் படப்பிடிப்பு நடத்தவேண்டும்.

இந்த நிலையில் கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவு உள்ளிட்ட அரசுத்துறைகளில் எந்தவித அனுமதியும் பெறாமல் நகராட்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் விபத்துக்காப்பு தடுப்புகளை அகற்றி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இதனால் நகராட்சி அதிகாரிகள் படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தினர்.

இதுபோல் சினிமா படப்பிடிப்பு நடத்துபவர்களில் சிலர் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை நிறுத்துவதும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story