சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்


சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்
x

சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்

திருவாரூர்

திருவாரூர் நகரில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு

திருவாரூர் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இ்ந்த மாடுகள் சாலையை கடப்பதால் வாகன விபத்துக்களும், உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படுத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. இதையடுத்து திருவாரூர் நகரில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் நகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

ரூ.1000 அபராதம்

இதையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் மூர்த்தி, நகராட்சி அமைப்பு ஆய்வாளர் கணேச ரெங்கன், ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியை தொடங்கினர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறுகையில், பிடிக்கப்பட்ட மாடுகளை திரும்பி விடுவதற்கு மாட்டிற்கு ரூ.ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு வாரத்திற்கு மேல் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். 10 நாட்களுக்கு மேல் திரும்ப பெறாவிட்டால் மாடுகள் கோ சாலையில் கொண்டு விடப்படும். பின்னர் மாடுகள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் தங்களது மாடுகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.


Next Story