ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
நாமக்கல்

திருப்பூர் குருநாதர் தெருவில் வசித்து வருபவர் கேசவராவ் (வயது58). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

திருப்பூர் ஆசிரம கிளை தலைவராக கந்தசுவாமி (69) என்பவரும், செயலாளராக ரவிச்சந்திரன் (65) என்பவரும் இருந்தனர். வடலூர் அருகே ஆசிரமம் அமைக்க இடம் வாங்குவதற்கும், தைப்பூச திருவிழா செலவிற்கும் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்தை ஆசிரமத்துக்காக வழங்கி உள்ளேன்.

வடலூரில் இடம் வாங்கிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டபோது, அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. நான், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினா். தாம் செலுத்திய பணத்தையும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தையும் சம்பந்தப்பட்ட நபர்கள் வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விரைவான விசாரணைக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் பயிற்சிக்காகவும், நன்கொடையாகவும் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நீதிமன்றத்தின் நேரத்தையும் மனித உழைப்பையும் வீணடித்ததற்காக அபராதமாக ரூ.10 ஆயிரம் வழக்கை தாக்கல் செய்த கேசவராவ் 4 வார காலத்துக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.


Next Story