மதுபான கூடத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
மதுபான கூடத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தற்காலிக பஸ்நிலைய பகுதிகளில் நேற்று கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அங்குள்ள டாஸ்மாக் கடை பகுதியில் அதிக அளவில் குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள் தேங்கி கிடந்ததை பார்த்தார். இதுகுறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தார். இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் மற்றும் அலுவலர்கள் டாஸ்மாக் கடையையொட்டி இயங்கும் மதுபான கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப் ஆகியவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மதுபான கூடத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story