தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்


தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 25 May 2023 12:45 AM IST (Updated: 25 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

கோயம்புத்தூர்

கோவை

கிரெடிட் கார்டு பெற்ற வாடிக்கையாளருக்கு சிபில் ஸ்கோரை எதிர்மறையாக பதிவு செய்து மன உளைச்சல் ஏற்படுத்திய தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கிரெடிட் கார்டு பெற்ற வாடிக்கையாளர்

கோவை ஒப்பணக்காரவீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் கோவை அவினாசிரோட்டில் உள்ள ஆர்.பி.எல். வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு பெற்று இருந்தேன். சர்வீஸ் சார்ஜ் கூடுதலாக இருந்ததால் அதனை ரத்து செய்ய விண்ணப்பித்தேன். ரத்து செய்துவிட்டதாக பதில் அனுப்பினர். இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பினார்கள். இதனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். இந்தநிலையில் நான் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து என்.ஓ.சி. (தடையின்மை) சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கவில்லை.

ரூ.40 ஆயிரம் அபராதம்

ஆனால் சிபில் ஸ்கோர் மதிப்பை எனக்கு எதிர்மறையாக மாற்றி பதிவு செய்துவிட்டனர். எனவே இந்த செயலால் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டேன். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மனுவை விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேல், சம்பந்தப்பட்ட தனியார் வங்கி மனுதாரரின் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.40 ஆயிரமும், கோர்ட்டு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் செலுத்துவதுடன், சிபில் ஸ்கோர் எதிர்மறை பதிவை நீக்குவதுடன், என்.ஓ..சி. சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டனர்.


Next Story