சேவை குறைபாடு: தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


சேவை குறைபாடு: தனியார் ஆஸ்பத்திரிக்கு     ரூ.75 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:47 PM GMT)

சேவை குறைபாட்டால் தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள இடையன்விளையை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் வயிற்றுவலி காரணமாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் வயிற்றுவலி குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் நாகர்கோவிலில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகேஸ்வரன் சேர்ந்தார்.

பின்னர் அதே நோய்க்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கோள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் ஆஸ்பத்திரியில் கேட்டுள்ளார். ஆனால் அவற்றை ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் உரிய பதில் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

பின்னர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஆஸ்பத்திரியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு நஷ்ட ஈடாக ரூ.75 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story