பட்டாசு ஆலையில் தீ விபத்து; தொழிலாளி காயம்


பட்டாசு ஆலையில் தீ விபத்து;  தொழிலாளி காயம்
x

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி காயம் அடைந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி பணிகள் நடந்தது. இதில் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (வயது 58) என்பவர் பட்டாசு மூலப்பொருளான திரிகளை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாத தீ விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். உடனே ஆலை நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் ஆலை நிர்வாகத்தை சேர்ந்த கண்ணன், ஏசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story