பெயிண்டு குடோனில் தீ விபத்து


சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே பெயிண்டு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

பெயிண்டு குடோன்

சேலம் மாவட்டம் மேச்சேரி காமனேரி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் சேலம்- தர்மபுரி பைபாஸ் ரோட்டில் பெரமச்சூர் மேம்பாலம் அருகில் அண்ணமார் திருமண மண்டபத்தையொட்டி பெயிண்டுகுடோன் வைத்துள்ளார். இந்த பெயிண்டு குடோனில் நேற்று காலையில் திடீரென தீப்பிடித்து பேரல் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வானுயர அளவுக்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த ஓமலூர், சேலம், காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்து நடந்த இடத்தில் தின்னர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த குடோன் அரசு அனுமதியுடன் வைக்கப்பட்டு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story