மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து
மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சம்பவத்தன்று மாலை 6.45 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் அந்த அறையில் இருந்த மின் இணைப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரி மணிமாலா என்பவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த அறையில் இருந்த ஸ்விட்ச் போர்டில் ஏற்பட்ட மின் கசிவு தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.
Related Tags :
Next Story