நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து


நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
x

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள், கேன்டீன், ஆவின் பூத், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. அதேபோல் கலெக்டர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் கேன்டீன், ஆதார் பதிவு முகாம், வானிலை பதிவு செய்யும் பகுதிகள், கார் நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகள் உள்ளன. இப்பகுதியில் மரங்கள், செடி- கொடிகள் அதிகமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. நேற்று காலை கேன்டீன் அருகே பின்புறத்தில் திடீரென குப்பைகளில் தீப்பிடித்தது. இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. காற்றின் வேகம் காரணமாக தீ அதிகமாக பரவ தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள கேபிள் டி.வி. அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story