மின்னல் தாக்கி பட்டாசு ஆலை அருகே தீவிபத்து
மின்னல் தாக்கி பட்டாசு ஆலை அருகே தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அனுப்பன்குளம் கிராமத்தில் சேவுகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையின் வெளியே அட்டை பெட்டிகள் வைக்க என ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து அதில் இருந்த அட்டை பெட்டிகள் மற்றும் காகித பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு நேரத்தில் விரைந்து சென்று தீ ஆலைக்குள் பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டாசு, தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story