பட்டாசு கடை அருகே தீ விபத்து
வாணியம்பாடியில் பட்டாசு கடை அருகே தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி- நியூடவுன் பைபாஸ் சாலையில் பட்டாசு கடை மற்றும் குடோன் இயங்கி வருகிறது. இதன் அருகில் காலி இடத்தில் காய்ந்து போன முட்புதர்கள் இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீர் என முட்புதரில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் வாணியம்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அப்பகுதியில் இருந்த 2 தென்னை மரங்களில் தீ பிடித்து சேதம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story