மின்கம்பத்தில் பற்றி எரியும் தீ
செம்பட்டி-மதுரை சாலையில் சக்கையநாயக்கனூர் அருகே, மொண்டம்பட்டி பிரிவு என்னுமிடத்தில் உள்ள மின்சார வயர்கள் இணைப்பு கம்பத்தில் திடீர் என்று தீப்பிடித்து எரிகிறது.
செம்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து, செம்பட்டி மற்றும் காமலாபுரம், சக்கையநாயக்கனூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பள்ளபட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக செம்பட்டியில் இருந்து உயர் மின்அழுத்த வயர்கள் மேட்டுப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், பூதிப்புரம், சக்கையநாயக்கனூர், ஜல்லிபட்டி வழியாக கொடைரோடு வரை செல்கிறது. இதில், செம்பட்டி-மதுரை சாலையில் சக்கையநாயக்கனூர் அருகே, மொண்டம்பட்டி பிரிவு என்னுமிடத்தில் உள்ள மின்சார வயர்கள் இணைப்பு கம்பத்தில் திடீர் என்று தீப்பிடித்து எரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த தீ அணைந்து விடுகிறது. கடந்த சில தினங்களாக இந்த கம்பத்தில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இதனால் மின்சார வயர்கள் அறுந்து சாலையில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.