தென்னந்தோப்பில் தீ
தென்னந்தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே அமச்சியாபுரம் காலனி பகுதியில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்ததோப்பில் நேற்று மாலை திடீரென தோப்பை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மூங்கில் வேலியில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீயானது பரவி தென்னை, மூங்கில் மரத்தில் பிடிக்க தொடங்கியது. முள்வேலியிலும் தீயானது பரவியது.
இதுகுறித்து பொதுமக்கள் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் கட்டுக்குள் கொண்டு வர போராடினார். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story