வைக்கோல் படப்பில் தீ
மேலச்செவலில் வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
மேலச்செவல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான சுமார் 200 கட்டுகள் கொண்ட வைக்கோல் படப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சேரன்மாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீச்சியடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.
இதேபோல் களக்காடு-கோவில்பத்து மேலகட்டளை தெருவில் உள்ள ஒரு கிணற்றில், வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு பூனை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சென்று, கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story