பூட்டிய வீட்டில் தீ விபத்து


பூட்டிய வீட்டில் தீ விபத்து
x

ராஜாக்கமங்கலம்துறையில் பூட்டிய வீட்டில் தீ விபத்து

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம்துறை சகாய மாதா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது44), மீனவர். இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இந்தநிலையில் மதியம் இவரது வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சசிகுமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டுக்குள் தீ எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க தொடங்கினர். மேலும் சசிகுமாருக்கும் தகவல் கொடுத்தனர். அவரும் விரைந்து வந்து கதவை திறந்து தீயை முற்றிலும் அணைத்தனர். அதற்குள் வீட்டு இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் போன்றவை தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ராஜக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story