கரும்பு தோட்டத்தில் தீ
பரமக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் அருகே உள்ள வெங்காளூர் கிராமத்தில் சந்திரன், ஆயினுல் பீவி, கருப்பையா, ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான நஞ்சை நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். அந்த வயலின் வழியாக சென்ற மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு கரும்பு பயிர்கள் அனைத்தும் தீப்பிடித்து மளமளவென எரிந்தன. இது குறித்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் குணசேகரன், ரமேஷ் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதில் தோட்டத்தில் உள்ள கரும்பு முழுவதும் எரிந்து நாசமாயின. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இது குறித்து பார்த்திபனூர் போலீசாரும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story