சுவரில் தள்ளி பட்டாசு தொழிலாளி கொலை


சுவரில் தள்ளி பட்டாசு தொழிலாளி கொலை
x

சுவரில் தள்ளி பட்டாசு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சுவரில் தள்ளி பட்டாசு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

பட்டாசு தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 42). பட்டாசு தொழிலாளி. இவர் தனது வேலைக்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி வந்துள்ளார்.

அவருக்கு பணத்தை எண்ண தெரியாது என கூறப்படுகிறது. அதே பகுதியில் உள்ள ஊரணியன் மகன்கள் மகேஷ்(28), சிவா (23) ஆகியோரிடம் பணத்தை எண்ணி தருமாறு கேட்டுள்ளார். இந்தநிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால், அண்ணன்-தம்பி சேர்ந்து, சுந்தர்ராைஜ தகாத முறையில் பேசி, அவரை சுவரில் பிடித்து தள்ளி மோத செய்தனர்.

இதில் காயம் அடைந்த சுந்தர்ராஜ் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகேஷ், சிவா ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ஒருவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கூமாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து சுந்தர்ராஜ் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சிட்டு அளித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகின்றனர். இதற்கிடையே இறந்த சுந்தர்ராஜின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு குவிந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Related Tags :
Next Story