மதுபாட்டிலுக்குள் மிதந்த 'ஈ'; குடிமகன்கள் அதிர்ச்சி


மதுபாட்டிலுக்குள் மிதந்த ஈ; குடிமகன்கள் அதிர்ச்சி
x

வேடசந்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் ‘ஈ’ மிதந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திண்டுக்கல்

திருச்சியை சேர்ந்தவர் முகமது கனி (வயது 33). இவர் வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர், அப்பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்.

நேற்று இரவு இவர், மதுபானம் குடிக்க முடிவு செய்தார். இதற்காக வேடசந்தூரில், ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்றார். அங்கு குவாட்டர் பாட்டில் மதுபானம் ஒன்றை வாங்கினார். அந்த பாட்டிலை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது மதுபான பாட்டிலுக்குள் ஈ மற்றும் தூசுக்கள் மிதந்தன. இதனை கண்ட சக மதுபிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர். பின்னர் அவர்கள், அந்த மதுபாட்டிலில் ஈ, தூசுக்கள் மிதந்ததை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

இதுபற்றி அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், சுதாரித்து கொண்டு முகமது கனியை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அவரிடம் இருந்து மதுபான பாட்டிலை வாங்கி கொண்டு, வேறு பாட்டிலை கொடுத்து அனுப்பி விட்டனர். இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story