மதுபோதையில் தங்கையை தவறான நோக்கத்தில் அழைத்த நண்பன்... வெட்டிக்கொன்ற அண்ணன்


மதுபோதையில் தங்கையை தவறான நோக்கத்தில் அழைத்த நண்பன்... வெட்டிக்கொன்ற அண்ணன்
x
தினத்தந்தி 19 May 2024 9:23 PM IST (Updated: 20 May 2024 11:59 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் தங்கையை தவறான நோக்கத்தில் அழைத்த நண்பனை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் மதுபோதையில் தங்கையை தவறான நோக்கத்தில் அழைத்த நண்பனை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித் குமார். அவரும், அவரது நண்பர் சரவணனும், வீட்டில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, தங்கையை அழைத்து வருமாறு தவறான நோக்கத்தில் ரஞ்சித் குமாரிடம் சரவணன் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரம் அடைந்த ரஞ்சித் குமார், சரவணனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ரஞ்சித் குமாரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story