18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி
18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரியில் தெப்ப உற்சவம் நடத்தி கிராம மக்கள் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:-
கெலமங்கலம் ஒன்றியம் ஜெ.காருப்பள்ளியில் பெரியஏரி 18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதை கொண்டாடும் வகையில் நேற்று பெரிய ஏரியில் ஜெ.காருப்பள்ளி, வெங்கடாபுரம், காமணப்பாளையம், ஜாகீர் ஸ்ரீராம்புரம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து ஏரியில் தெப்பம் விட்டனர். அதில் கிராம தேவதை எல்லாம்மாவை வைத்து மேள தாளங்கள் முழங்க ஏரியை சுற்றி வந்து தெப்ப உற்சவம் செய்தனர். கிராம தேவதைகளுக்கு கிடாய் வெட்டி, மா விளக்கு எடுத்து பூஜை செய்து வழிபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யவதி நாகராஜ், ராஜப்பா, முனிகிருஷ்ணன் மற்றும் 4 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story