புறம்போக்கு இடத்தில் விநாயகர் சிலை வைத்ததால் பரபரப்பு


புறம்போக்கு இடத்தில் விநாயகர் சிலை வைத்ததால் பரபரப்பு
x

திமிரி அருகே புறம்போக்கு இடத்தில் விநாயகர் சிலை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story