கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது


கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது
x

பெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர்:

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமிர் (வயது 28). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது தந்தையும் இவருடன் குடிசையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் உறவினர்கள் கிளம்பி சென்றனர்.

அவர்களை வழியனுப்ப வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்திருந்தனர். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

குடிசை எரிந்து சேதம்

இதனால் தீ மளமளவென குடிசையில் பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்து தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

பின்னர் தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கு காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story