தோழியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை


தோழியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

தோழியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோயம்புத்தூர்

துடியலூர்,ஜூலை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தந்தை துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அந்ததோழியின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக திண்டுக்கல்லில் இருந்தார். இதைத்தொடர்ந்து சிறுமி தனது தோழியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றார். அப்போது சிறுமிக்கும் அவரது தோழியின் தம்பியான 16-வயது சிறுவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டுகாதலாக மாறியது. அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி அறிந்த போலீசார் விசாரணை நடத்தி தோழியுடன் இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழியின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்தனர்.பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story