வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது வீட்டுக்குள் சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் நுழைந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்புக் காட்டில் பாம்பை விட்டனர்.
Related Tags :
Next Story