ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்
பேட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது.
பேட்டை:
முக்கூடல் அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சண்முகம் மகள் பரமாச்சி (வயது 25). பி.காம். பட்டதாரியான இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து தினமும் பஸ்சில் ஊருக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமாச்சி, வேலை முடிந்து நெல்லையில் இருந்து கடையம் செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பேட்டை செக் போஸ்ட்டில் சென்றபோது பரமாச்சி அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை காணவில்லை.
இதுகுறித்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, பஸ் பயணிகளிடம் சோதனை நடத்தியும் நகை கிடைக்கவில்லை. பஸ் பயணத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், தங்க சங்கிலியை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பேட்டை இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.