நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
பட்டிவீரன்பட்டி அருகே நடுரோட்டில் அரசு பஸ் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக குமுளி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 60 பயணிகள் பயணித்தனர். மதியம் 1.45 மணி அளவில், திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே சிங்காரக்கோட்டை என்ற இடத்தில் பஸ் வந்தது.
அப்போது திடீரென பஸ் பழுதடைந்து நடுரோட்டில் நின்று விட்டது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பரிதவித்தனர். குழந்தைகளுடன் சாலையோரத்தில் காத்திருந்தனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பெரும்பாலான பஸ்கள் தரமற்றதாக இருப்பதாகவும், எனவே புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story