சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு விரைவு பஸ்


சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு விரைவு பஸ்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு விரைவு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் அதிகாலை 5 மணியளவில் வரும்போது முன்னாள் சென்ற வாகனம் திடீரென நின்றது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க உடனே அரசு விரைவு பஸ்சின் டிரைவர் பிரேக் போட்டார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த சுமார் 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தினால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். பின்னர் மாற்று பஸ்சை வரவழைத்து அந்த பஸ்சில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இறங்கி நின்ற பஸ் மீட்கப்பட்டது.


Next Story