கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பயனின்றி கிடக்கும் அரசு வாகனம்
கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பயனின்றி கிடக்கும் அரசு வாகனம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் 2 ஜீப்புகள் உள்ளன. இதில் ஒரு ஜீப்பை கிணத்துக்கடவு தாசில்தாரும், மற்றொரு ஜீப்பை குடிமைப்பொருள் தாசில்தாரும் பயன்படுத்தி வந்தனர். இதில் குடிமைப்பொருள் தாசில்தார் பயன்படுத்தி வந்த ஜீப் திடீரென பழுதடைந்தது. அதன்பிறகு அந்த பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது தூசி படிந்து, பார்க்கவே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தமிழக-கேரள எல்லையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அந்த ஜீப்பை தாசில்தார் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இருசக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரோந்து செல்வது, ரேஷன் அரிசி கடத்தல்காரர்களை துரத்தி பிடிப்பது போன்ற பணிகள் சவாலாகி விடுகிறது. எனவே பயனற்று கிடக்கும் அந்த ஜீப்பை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.