மோட்டார் சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி
x

திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பட்டதாரி வாலிபர்

திருவண்ணாமலை மேல் செங்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஜோதிகுமார் (வயது 25), பொறியியல் பட்டதாரி.

இவர் கடந்த 12-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை செங்கம் சாலை சோலையம்மன் நகர் சந்திப்பு பகுதியில் வரும்போது முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி லாரியின் பின் பக்கத்தில் மோதியதில் அவர்கள் கீழே விழுந்தனர்.

வாலிபர் பலி

இதில் படுகாயம் அடைந்த ஜோதிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story