ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த காவலாளி சாவு


ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த காவலாளி சாவு
x

ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன் தினம் ஆம்பூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தை அடைந்தது. ரெயில் புறப்பட்டு நகர்ந்தபோது ஓடும் ரெயிலில் ஏற முயன்ற ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதே ரெயிலில் அடிபட்டு கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு விசாரணை மேற்கொண்ட போது அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மேல்கருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவரின் மகன் வடிவேல் (வயது 38) என்பதும் இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மாதனூரில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்கு வந்த இவர் மீண்டும் வேலைக்கு செல்ல மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்தது தெரியவந்தது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story