மதுரையில் கருத்தரங்குக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது
மதுரையில் கருத்தரங்குக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கருத்தரங்குக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் மாணவி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சி.ஏ. (பட்டய கணக்காளர்) படித்து வந்தார். மதுரையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த படிப்பு தொடர்பாக கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அந்த பெண் விமானம் மூலம் இரவு மதுரை வந்தார். பின்னர் தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
அந்த விடுதியில் அவரது அறைக்கு அருகே அந்த பெண்ணிற்கு தெரிந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆஷீஷ்ஜெயின்(22) என்பவர் தங்கியிருந்தார். அப்போது அந்த பெண்ணிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவரும் கருத்தரங்கிற்கு வந்த சென்னை மாடவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெரோம்கதிரவன் (22) என்பவருக்கு போன் செய்து அந்த பெண்ணிற்கு தேவையான உணவு பொருட்கள், மருந்துகள் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
2 பேர் கைது
அதனை அந்த பெண் சாப்பிட்ட பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
அது குறித்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷீஷ்ஜெயின், ஜெரோம்கதிரவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தொடர்ந்து விசாரித்து வருகிறார்.