சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி


சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி
x

சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சர்வாலய தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கார்த்திகை வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சர்வாலய தீபமான நேற்று காலை முதல் விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர், சந்திரமவுலி அம்பாள் சமேத சந்திரசேகரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சந்திரமவுலீ அம்பாள் சமேத சந்திரசேகரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி தந்தனர். சந்திரசேகர சுவாமி திருக்கார்த்திகையை முன்னிட்டு சர்வாலய தீபத்தன்றும், பிட்டு உற்சவம் அன்றும் மட்டுமே விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளுவது வழக்கம். பின்னர் சுவாமி அம்பாளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஷோடச உபச்சாரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பல்வேறு பதிகங்களை பாடி வழிபாடு மேற்கொண்டனர். மங்கல இசை ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் பிரகார பிரதோஷம் செய்யப்பட்டு தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story