ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்


ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 4 Jun 2023 1:15 AM IST (Updated: 4 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

கோயம்புத்தூர்

நெகமம்

செட்டியக்காபாளையத்தில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில் தேவணாம்பாளையம் உள்ளது. இங்கு சிற்றாறு செல்கிறது. இந்த சிற்றாறு தேவணாம்பாளையத்தில் இருந்து சூலக்கல் வழியாக கேரளாவிற்கு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தேவணாம்பாளையத்தில் தரைமட்டப்பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் வழியாக கிணத்துக்கடவில் இருந்து செட்டியக்காபாளையம் வழியாக தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, கோப்பனூர் புதூர், நெகமம், பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் வந்தால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேவணாம்பாளையம் ஆற்றில் ஆய்வு செய்து தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story