கோபி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்தது


கோபி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்தது
x

கோபி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்தது

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் வடக்கு வீதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசை வீட்டில் மனைவியுடன் வசித்து வரும் இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சண்முகமும், அவருடைய மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் குடிசையில் இருந்து புகை வந்தது. சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் குடிசையில் இருந்த துணி, சமையல் பொருட்கள், பாத்திரங்கள் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக குடிைச தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story