அரசு பள்ளியில் படித்த கரூர் மாணவிக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் இடம்


அரசு பள்ளியில் படித்த கரூர் மாணவிக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் இடம்
x

அரசு பள்ளியில் படித்த கரூர் மாணவிக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ஏழை-எளியோருக்கு சேவை செய்வேன் என மாணவி கூறினார்.

கரூர்

மருத்துவக்கல்லூரியில் இடம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம், கல்லு பாளையத்தைச் சேர்ந்த கூலிதொழிலாளியான சேகர்-கற்பகம் தம்பதியின் மகள் ஹரிணிக்கு பொதுப்பிரிவில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. இவர் அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளார். நீட் தேர்வில் 292 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிணி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெற்றோர், கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பேட்டி

இதுகுறித்து மாணவி ஹரிணி கூறுகையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்லுபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். பிறகு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். சிறு வயது முதலே எனக்கு மருத்துவம் படித்து ஏழை, எளியோருக்கு சேவை செய் வேன் என்ற எண்ணம் இருந்தது. அதற்காகவே நீட் தேர்வில் முழு கவனத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்து உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இந்த மருத்துவ படிப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம், என்றார்.


Next Story