கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி பாலக்கரை பீமநகரில் காய்கறி வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து, பாலக்கரையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கொழுப்பு பாரதி என்ற பாரதிதாசன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மணிகண்டன் மீது கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக 2 வழக்கு, கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்கு உள்பட 11 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், பாரதிதாசன் மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 3 வழக்குகளும், பெண்களிடம் சங்கிலி பறித்ததாக 3 வழக்குகளும், இருசக்கர வாகனத்தை திருடியதாக 2 வழக்குகளும், கஞ்சா விற்ற ஒரு வழக்கு உள்பட 12 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர்களுடைய குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, மணிகண்டன், பாரதிதாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

1 More update

Next Story