மது போதையில் பனை மரத்தில் ஏறி உறங்கிய தொழிலாளி


மது போதையில் பனை மரத்தில் ஏறி உறங்கிய தொழிலாளி
x
தினத்தந்தி 15 May 2023 1:45 AM IST (Updated: 15 May 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

மது போதையில் பனை மரத்தில் ஏறி உறங்கிய தொழிலாளி கிரேன் மூலம் மீட்கப்பட்டார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை அடுத்த செம்பனாம்பதி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் ஜமீன் கோட்டம்பட்டி ஆவுச்சின்னம்பாளையதில் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் உள்ள 60 அடி உயர பனை மரத்தில் மது பாட்டிலுடன் ஏறினார். அங்கு மரத்தில் இருந்தபடி மது அருந்தி விட்டு, போதையில் உறங்கி விட்டார். பின்னர் அவர் மரத்தில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், கோட்டூர் போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் லட்சுமணனை மீட்டனர். பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story