பீரோவை திறப்பதுபோல் நடித்து 13 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது


பீரோவை திறப்பதுபோல் நடித்து 13 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
x

பீரோவை திறப்பதுபோல் நடித்து 13 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

பீரோவை திறப்பதுபோல் நடித்து 13 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிந்து கோஷ் (வயது 41) இவர் மலேசியாவில் 15 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் தந்தை கணேசன் குடும்பத்தினருடன் வாலாஜாவில் வசித்து வருகிறார் ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணேசன் வீட்டில் இருந்த பீரோ சாவி தொலைந்து விட்டது.மாற்று சாவியை போட்டு திறந்திட முயற்சி செய்தார். இதற்காக தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் பீரோ ரிப்பேர் கடையில் வேலை செய்யும் லோகேஸ்வரன் (32) அழைத்து பீரோவை திறக்க வைத்தார்

அப்போது பீரோவின் உள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகளை கணேசனுக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி லோகேஸ்வரன் திருடி சென்று விட்டார்.இந்த நிலையில் 3 மாதத்திற்கு முன்பு வாலாஜா வந்த பிந்துகோஷ், தாளன் ஏற்கனவே பீரோவில் வைத்து விட்டு சென்ற 13 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து தந்தையிடம் விசாரித்தார்.அப்போது சாவி தொலைந்து விட்டதால் மாற்றுச்சாவியை லோகேஸ்வரன் தயார் செய்து திறந்ததை கூறினார். சந்தேகத்தின்பேரில் போலீசில் புகார் செய்யப்பட்டது,. அதன்பேரில் லோகேஸ்வரனிடம் விசாரித்தபோது 13 பவுன் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மற்ற நகைகள் அடமானம் வைத்து விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து லோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story