இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி


இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி
x

இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி

திருப்பூர்

அவினாசி

அவினாசி குருந்தங்காடு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் கார்த்தி (வயது 24). கட்டிட சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்று கார்த்தி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கார்த்தியை பரிசுத்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story