நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்


நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்
x

நாகநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாளையம் கிராமம் அருகே நாகநதி ஆறு ஓடுகிறது. ஆற்றின் மறுகரையில் காட்டுக்காநல்லூர் கிராமம் உள்ளது. இந்த இரு கிராமங்களுக்கும் மண் பாதை வழியாக சென்று, ஆற்றில் இறங்கி மறுகரையை அடைய வேண்டும். ஆனால் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க முடியாது. தற்போது மண் பாதை வழியாகச் சென்று ஆற்றில் இறங்கி செல்லும் பகுதியில் நாணல், புதர் வளர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஒட்டப்பாளையம் காட்டுக்காநல்லூர் காலனி இடையே செல்லும் நாகநதி ஆற்றின் குறுக்கே ராட்சத குழாய்கள் பதித்து, அதன் மீது தரைப்பாலம் கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story