திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஆடி அமாவாசையையொட்டி குவிந்த திரளான பக்தர்கள் புனித நீராடியும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு நடத்தினர்.

தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஆடி அமாவாசையையொட்டி குவிந்த திரளான பக்தர்கள் புனித நீராடியும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஆடி அமாவாசையையொட்டி குவிந்த திரளான பக்தர்கள் புனித நீராடியும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு நடத்தினர்.

தீர்த்தவாரி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

பின்னர் 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி, ஆடி அமாவாசை தினமான நேற்று ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் குவிந்து புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டார்கள். மேலும், கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story