கால்கள் ஊனமுற்ற வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம் வழங்க வேண்டும்


கால்கள் ஊனமுற்ற வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம் வழங்க வேண்டும்
x

கால்கள் ஊனமுற்ற வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம், கைகளை இழந்த அக்காள், காலால் மனு எழுதி அளித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் மகள் தீபா (வயது 34). இரண்டு கைகளையும் இழந்த தீபா, நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் தனது காலால் கோரிக்கை மனு ஒன்றை எழுதி கலெக்டரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு இரண்டு கைகளும் இல்லை. எனது தம்பி குமரன் (30) இரண்டு கால்களும் ஊனமுற்றவன். எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை காக்க, அவன் பெட்டிக்கடை வைக்க முயற்சி செய்கிறான். அதனால் பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும். எனவே பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story