தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைப்புலி


தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 11 Oct 2023 8:30 PM GMT (Updated: 11 Oct 2023 8:30 PM GMT)

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஓய்வெடுத்தது.

நீலகிரி

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட குன்னூர் டெண்ட்ஹில் பகுதியில் கரடி புகுந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சிங்காரா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை ஒட்டி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளன.

இதற்கிடையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று, அங்குள்ள தேயிலை தோட்டத்திற்கு வந்தது. தொடர்ந்து ேநற்று காலை தேயிலை தோட்டத்தின் மைய பகுதியில் உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இதை கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து, அங்கிருந்து வெளியேறினர். இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. எனவே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story